மற்றவை

புதுக்கோட்டையும் மனக் கோட்டையும்; ‘அமைச்சராகும் கனவில்’ களம்காணும் பிரபலங்கள்

கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டத்துடன் தொடர்புடைய தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ், அதிமுக வேட்பா ளர்கள் மத்திய அமைச்சராகும் கனவில் இருக்கின்றனர்.

புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி இல்லாமல் போனதால் இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் புதுக் கோட்டையும், கந்தர்வக்கோட்டை யும் திருச்சி மக்களவைத் தொகுதி யுடனும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கையுடனும் விராலிமலை கரூர் மக்களவைத் தொகுதியு டனும் அறந்தாங்கி தொகுதி ராமநாதபுரம் மக்க ளவைத் தொகுதியுடனும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த 4 மக்களவைத் தொகுதி களில் கரூர் தொகுதியில் மட்டும் அதிமுக போட்டியிடு கிறது. மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இத் தொகுதிகளில் திமுக போட்டியிட வில்லை. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டி யிடும் சு.திருநாவுக்கரசர், ஏற் கெனவே மத்திய, மாநில அமைச் சராக இருந்தவர் என்பதுடன், கட்சியின் மேலிடத்தில் செல் வாக்கு மிக்கவராக இருப்பதால் இத்தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் இவர் மத்திய அமைச்ச ராவது உறுதி என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று, சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் மத்திய அமைச்சராவது உறுதி என்ற நம்பிக்கையுடன் பாஜகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆலங்குடியில் அண்மையில் நடை பெற்ற அதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத் தில் பேசிய சுகாதாரத் துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கரும் இதே கருத்தை பதிவு செய்தார்.

இழுபறிக்குப் பிறகு..

இதுமட்டுமின்றி, முன்னாள் மத் திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றால் நீண்ட இழுபறிக்குப் பிறகு அவர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டதுபோல, மத்திய அமைச்சராக அறிவிக்கப்படவும் வாய்ப்பு உள்ள தாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

மு.தம்பிதுரை வெற்றி பெற்றால் அவரும் மத்திய அமைச்சராவார் என்கின்றனர் அதிமுகவினர்.

ஆதரவாளர்கள் உற்சாகம்

வெற்றி பெற்றால், மத்திய அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்பதால், ஸ்டார் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், தொண்டர்களும் உற்சாகமாகப் பணியாற்றி வருகின் றனர்.

SCROLL FOR NEXT