மற்றவை

தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

7 கட்டங்களாக நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலில் 2-ம் கட்டமாக ஏப்.18-ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் அன்றைய தினமே இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

நேற்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து, அம்மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இரண்டுக்கும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18-ம் தேதி பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டது.

SCROLL FOR NEXT