மற்றவை

காவலர்களுக்கு மனநல ஆலோசனை; தமிழகத்துக்கு தனி செயற்கைக்கோள்; கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் கைவிடப்படும்: அமமுகவின் 25 தேர்தல் வாக்குறுதிகள்

செய்திப்பிரிவு

அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (வெள்ளிக்கிழமை) அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

அதன் 25 சிறப்பம்சங்கள்:

1. விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதியில்லை.

2. ஜிஎஸ்டி கவுன்சில் நிர்வாகத்தில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.

3. அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி. கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிக கடன்களும் தள்ளுபடி.

4.  விவசாயத்திற்கு இலவச ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்படும்.

5. தமிழகத்திற்கு என தனி செயற்கைக்கோள் ஏவப்படும்.

6. கல்லூரி வளாகங்கள் அனைத்திற்கும் இலவச வைஃபை வசதி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச கையடக்க கணினி

7. பொறியியல் பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம்

8. ஆறு இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள்

9. மத்திய, மாநில அரசுப் பணிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு  முன்னுரிமை

10. தனியார் நிறுவன ஊழியர்களின் திருமண ச் செலவுகளுக்கு ரூ.2 லட்சம் வட்டியில்லாக் கடன்

11. மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள்

12. மாணவிகளுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை

13. ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருட்கள் இலவசம்      

14. ஊராட்சி ஒன்றியம் தோறும் அம்மா கிராமப்புற வங்கி ஏற்படுத்தப்படும்.

15. காவலர்களுக்கு உரிய மனநல ஆலோசனை

16. மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பீட்டுத் திட்டம்

17. மாவட்டத்திற்கென ஒரு  தொழிற்பேட்டை

18. கூடங்குளம் அணு உலை விரிவாக்கம் கைவிடப்படும். எதிர்ப்பு போராட்டத்தின் போது பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

19. மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு தமிழகத்தில் தடை.

20. சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை

21. வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க தனி வாரியம்.

22. ஏழை இஸ்லாமியர்களுக்கு வீட்டு வசதி மற்றும் வக்ஃபு வாரியம் மூலம் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்.

23. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு இலவச வீட்டு வசதி

24. இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு இலவச விதைகள் வழங்கப்படும்.

25. தஞ்சாவூரில் தேசிய வேளாண் பயிர்க் காப்பீட்டு நிறுவனம் அமைக்கப்படும்.

SCROLL FOR NEXT