மற்றவை

கோடீஸ்வர வேட்பாளர்கள்; புதுச்சேரியில் கமல் கட்சி வேட்பாளர் முதலிடம்

செ.ஞானபிரகாஷ்

களத்திலுள்ள  கோடீஸ்வர வேட்பாளர்களில் புதுச்சேரியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் முதலிடத்தில் உள்ளார்.

புதுச்சேரியில் ஆளுங்கட்சியான காங்கிரஸில் வைத்திலிங்கமும், எதிர்க்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தரப்பில் டாக்டர் நாராயணசாமியும், மக்கள் நீதி மய்யம் சார்பில் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் உட்பட 7 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதில்  மூவர் கோடீஸ்வர வேட்பாளர்கள். அதில் கமல் கட்சியின் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் முதலிடத்தில் உள்ளார்.

மக்கள் நீதி மய்ய வேட்பாளர் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியன் சொத்து மதிப்பு:

டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியனிடம் ரூ. 12.72 கோடி அசையும் சொத்துகளும், அவரது மனைவியிடம் ரூ. 15.59 லட்சம் மதிப்பிலும், மகனிடம் ரூ. 18.99 லட்சம் மதிப்பிலும் அசையும் சொத்துகள் உள்ளன.

அதேபோல் அசையா சொத்துகள் டாக்டர் எம்ஏஎஸ் சுப்பிரமணியனிடம் ரூ. 13.67 கோடி மதிப்பிலும், மனைவி பெயரில் ரூ. 12.62 கோடியிலும் சொத்துகள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ. 2.88 கோடி வங்கிக் கடன் உள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் சொத்து மதிப்பு:

அசையும் சொத்து வைத்திலிங்கத்திடம் ரூ. 2.94 கோடியும், அவரது மனைவி சசிகலாவிடம் ரூ. 2.55 கோடியும், அசையா சொத்துகள் வைத்திலிங்கத்திடம் ரூ. 4.12 கோடியும், அவரது மனைவியிடம் ரூ. 1.17 கோடியும் உள்ளது. அவரது மனைவி பெயரில் ரூ. 5.2 லட்சம் கடன் உள்ளது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்  டாக்டர் நாராயணசாமியின் சொத்து மதிப்பு:

அசையும் சொத்து தங்கம் ரூ.1.88 கோடி மதிப்பிலான 6,480 கிராம். வெள்ளி ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 15,890 கிராம். மொத்த மதிப்பு ரூ. 2.94 கோடி. அதேபோல் அவரது மனைவி ஐஸ்வர்யாவிடம் தங்கம் 50 பவுன். அதன் மதிப்பு ரூ. 11.61 லட்சம். மொத்தக் கையிருப்பு ரூ. 23.43 லட்சம். இருவரிடம் சேர்த்து மொத்தம் ரூ. 3.17 கோடி மதிப்பு.

நாராயணசாமி பெயரில் ரூ. 4.14கோடி மதிப்புள்ள அசையாத சொத்துகள் உள்ளன. அவரது மனைவி பெயரில் ரூ. 1.04 கோடி மதிப்புள்ள அசையாத சொத்துகள் உள்ளன. நாராயணசாமி பெயரில் ரூ. 1.27 கோடி கடன் உள்ளது.

SCROLL FOR NEXT