மற்றவை

மதச்சார்பற்ற ஆட்சி அமைய திமுகவுக்கு வாக்களியுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மத்தியில் நிலையான, மதச்சார்பற்ற ஆட்சி அமைய, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென்று, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக் கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரா னார். கடந்த காலங்கள் அவருக்கு பாடங்களைக் கற்றுக் கொடுத் திருக்கும் என்று நம்பித்தான் மக்கள் வாக்களித்தனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் மத்திய அரசுடன் நெருக்க மான உறவை வளர்த்துக் கொண்டு தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர நினைத்தாரா என்றால் இல்லை.

முதல்வராக பதவியேற்று டெல்லிக்கு முதல் முறையாக சென்றதி லிருந்து இன்று வரை மத்திய அரசுட னான அவரது மோதல் தொடர்கிறது. அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்திலிருந்தே வெளிநடப்பு செய்தார். தினமும் ஏதாவது ஒரு கடிதம் எழுதி மத்திய அரசுடன் மோதுவதை மட்டுமே தன் பிரதான வேலை என்று நினைத்துக் கொண்டு அவர் செயல்பட்டார். மத்திய அரசு நிதியுதவியுடன் நடக்கும் எண்ணூர் துறைமுகம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை முடக்கினார். தமிழக வளர்ச்சிக்கான சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு போட்டார். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்கும் முட்டுக்கட்டை போட்டார்.

இப்படிப்பட்டவர் கையில் மீண்டும் எம்.பி.க்களைக் கொடுத்தால், மத்தியில் மீண்டும் ஒரு நிலையற்ற ஆட்சிக்குத்தான் வழி வகுக்கும். மாநிலத்திற்கும் வளர்ச்சித் திட்டங்கள் வராது. எனவே, மத்தியில் நிலையான, மதசார்பற்ற ஆட்சி அமைய திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT