ரிப்போர்ட்டர் பக்கம்

வானம்பாடிகள் மறைவதில்லை

மானா பாஸ்கரன்

கவிக்கோ அப்துல் ரகுமான் மறைவுக்குப் பிறகு, அவர் எழுதி வெளியிடாமல் வைத்திருந்த கவிதைகளை எல்லாம்  அவர் இல்லதில் இருந்து தேடி எடுத்து தொகுத்து 'இரவு கிண்ணத்தில் நிலவின் மது' என்கிற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்.

நேற்று முன் தினம் புத்தகக் காட்சியில் நக்கீரன் ஸ்டாலில் கவிஞர் மு.மேத்தா வெளியிட கவிஞர் சிற்பி பெற்றுக் கொண்டார்.

இந்த இனிமையான நூல் வெளியீட்டு விழாவுக்கு  வந்திருந்தவர்களை கவிஞர் ஜலாலுதீன் வரவேற்றார். கவிஞர் ஜெயபாஸ்கரன் தலைமை வகித்தார். கலை விமர்சகர் இந்திரன் முன்னிலை வகித்தார்.

புத்தகத்தை வெளியிட்ட கவிஞர் மு.மேத்தா கவிக்கோவின் அற்புதமான நட்பை உணர்த்தும் வகையில் கவியுரை நிகழ்த்தினார். 'இரவு கிண்ணத்தில் நிலவின் மது' நூலை பெற்றுக்கொண்ட கவிஞர் சிற்பியின் உரை நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டியது. இவ்விழாவில் -  நக்கீரன் பொதுமேலாளர் சுரேஷ்,  இலக்கிய ஆளுமைகள் பிருந்தா சாரதி,  முனைவர் ஆதிரா முல்லை, ஃபைஸ் காதிரி, உஸ்மான், லெக்சு, சூர்யா, கவிக்குழல், இலக்கியன், ஜாஃபர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

70-களில் தமிழ் இலக்கிய வானில் தங்கள் அகலமான றெக்கைகளை விரித்து வானளந்து பறந்த வானம்பாடி கவிஞர்களில்  ஒருவரான கவிக்கோ அப்துல் ரகுமானின் நூலை, வானம்பாடி இயக்கத்தின் தூண்களாகத் திகழ்ந்த  கவிஞர் மு.மேத்தாவும் கவிஞர் சிற்பியும் கல்ந்துகொண்டு சிறப்பித்தது... வானம்பாடிகளை மறைவதில்லை என்று உரக்கச் சொல்லத் தோன்றுகிறது.

ஆம், வானம்பாடிகளின்  வானம்  அதே நீலத்தில்.... அப்படியேதான் இருக்கிறது.

SCROLL FOR NEXT