பாலாற்றில் மணல் கொள்ளையை அதிமுக அரசு தடுக்கவில்லை என கனிமொழி எம்பி பேசினார்.
காஞ்சிபுரம் (தனி) தொகுதி திமுக வேட்பாளர் ஜி.செல்வத்தை ஆதரித்து வாலாஜாபாத்தில் நடை பெற்ற பிரச்சார கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த திட்டங்கள் எதுவும் மக்களைச் சென்றடையாமல் தடுத்தவர் ஜெயலலிதா. கடந்த 6 மாதங்களாக எந்த பயனாளி களுக்கும் முதியோர் ஓய்வூதியம் சென்று சேரவில்லை.
சென்னையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பார்வையற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அடித்து வேனில் ஏற்றி, வேறு இடத்தில் இறக்கிவிட்டவர் ஜெயலலிதா. 3 ஆண்டுகளாக ஜெயலலிதா முதல்வராக இருக்கும் நிலையில், மின்வெட்டு பிரச்சினைக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படி காரணமாக முடியும். மின்வெட்டால் பல தொழில்கள் முடங்கிப்போயுள்ளன. இதனால் புதிய தொழிற்சாலைகளை ஜெய லலிதா கொண்டு வரவில்லை. இதன் விளைவாக தற்போது தமிழகத்தில் வேலைவாய்ப் பற்றோர் எண்ணிக்கை மேலும் 10 லட்சம் அதிகரித்துள்ளது.
நியாயவிலைக் கடைகளில் எந்த பொருளும் முழுமையாக கிடைக் கவில்லை.
பாலாற்றில் மணல் கொள்ளையை இந்த அரசால் தடை செய்ய முடிய வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.