அரியலூரில் தொடங்கி திருமானூர், கீழப்பழூர் உள்ளிட்ட ஊர்களில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசியை ஆதரித்து புதன் கிழமை இரவு வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியது:
அலைவரிசை ஊழலில் சிக்கிய திமுகவும் அதற்கு துணை போன காங்கிரஸும் தேர்தலையொட்டி, சேர்ந்தும் விலகியும் நாடகம் போடுகின்றன. வாக்காளர்கள் விழிப்புடன் இவர்களை கவனித்து விலக வேண்டிய நேரம் இது.
தங்களுடைய கூட்டணி பற்றி பெருமையாக திமுகவினர் பேசு கின்றனர். கூட்டணி கட்சியின் பிரச்சாரத்திலிருந்த ஒரு தலை வரை தேனீக்கள் கடித்ததும், அவர் விழுந்து அடிபட்டதுமாக செய்திகள் வெளியாகியும், திருமா வளவனை கருணாநிதி விசாரித்த தாக ஒரு செய்தி இல்லை. இதுதான் அவர்கள் மெச்சிக் கொள்ளும் கூட்டணியா?” என்றார் சரத்குமார்.