மற்றவை

பட்டாசுத் தொழில் பாதிப்பு: மார்க்சிஸ்ட் கண்டனம்

செய்திப்பிரிவு

பட்டாசு உரிமக் கட்டணம், புதுப்பித்தல் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியதால் பட்டாசுத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளார் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பட்டாசுத் தொழிலின் உரிமக் கட்டணத்தை மத்திய அரசு ரூ.15 ஆயிரத்தில் இருந்து 27 மடங்கு உயர்த்தி ரூ.4 லட்சமாக்கியுள்ளது. புதுப்பித்தல் கட்டணமும் ரூ.100-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. சீனா பட்டாசுகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. பட்டாசுத் தொழிலை கடுமையாக பாதிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

இதனால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கடந்த 6-ம் தேதி முதல் காலவரையற்ற உற்பத்தி நிறுத்தம் செய்து வருகின்றனர். எனவே, உயர்த்திய கட்டணத்தை ரத்து செய்து, இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT