மற்றவை

முதல்முறை வாக்களிப்பவர்களுக்கு..

செய்திப்பிரிவு

வாக்களிக்க செல்லும் போது தங்களது வாக்காளர் அடை யாள அட்டை அல்லது பூத் சிலிப் கொண்டு செல்ல வேண்டும்.

இது இரண்டும் இல்லையென்றால் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக் கும் 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.

வாக்குச்சாவடியின் உள்ளே நுழைந்தவுடன் கொண்டு வந்த அடையாள ஆவணத்தை அதிகாரிகளிடம் காண்பிக்க வேண்டும். வாக்காளரின் பெயர் மற்றும் அவர் வசிக்கும் பாகத்தை ஒரு அதிகாரி உரக்க வாசிப்பார்.

வாக்காளர் வந்ததற்கு அடையாளமாக, வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் அடிக்கோடு இடப்படும். பிறகு, 17ஏ என்ற படிவத்தில் வாக்காளர் கையெழுத்திட வேண்டும். அதன் பிறகு, அவர் வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வாக்களிக்கிறாரா அல்லது பூத் சிலிப் கொண்டு வாக்களிக்கிறாரா என்பது குறித்து வைக்கப்படும்.

பிறகு, ஒரு சீட்டில் வாக்காளரின் பெயர், எண் ஆகிய தகவல் களை அதிகாரிகள் எழுதி வைத்துக்கொள்வர். அதன் பின், வாக்காளரின் ஆள்காட்டி விரலில் மை வைக்கப்படும்.

வாக்களிக்கும் இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மறைவான இடத்தில் வைக்கப் பட்டிருக்கும். வாக்குச்சாவடி அதிகாரி கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்துவார். அப்போது ‘பீப்’ என்ற ஒலி கேட்கும். அதன் பிறகு, வாக்காளர் தனக்கு விருப்பமான வாக்காளரின் சின்னத்துக்கு எதிரில் உள்ள பட்டனை அழுத்தலாம்.

வாக்கு பதிவானதற்கு அடையாளமாக மீண்டும் ‘பீப்’ ஒலி கேட்கும். அதன் பின் அதிகாரி கண்ட்ரோல் யூனிட்டை மீண்டும் தயார் செய்தால் மட்டுமே வாக்களிக்க முடியும்.

SCROLL FOR NEXT