இதர மாநிலங்கள்

இந்துக்கள் பகுதியில் முஸ்லிம்கள் சொத்து வாங்க எதிர்ப்பு: பிரவீண் தொகாடியா பேச்சு குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

செய்திப்பிரிவு

இந்துக்கள் வசிக்கும் பகுதியில் முஸ்லிம்கள் சொத்து வாங்கு வதற்கு விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் கண்டனம் தெரிவித் துள்ளன. விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத்தின் பாவ்நகர் அருகே இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேகானி சர்க்கிள் பகுதியில் உள்ள வீட்டை முஸ்லிம் வியாபாரி ஒருவர் வாங்கியுள்ளார். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம் அமைப்பினர் கடந்த சனிக்கிழமை போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா பங்கேற்றார். அப் போது, அந்த வீட்டை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் படியும், பஜ்ரங் தளம் அமைப்பின் பலகையை தொங்கவிடுமாறும் தொகாடியா அறிவுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

போராட்டத்தின்போது பிரவீண் தொகாடியா பேசியதாவது: இது போன்று பிற சமூகத்தினருக்கு அசையா சொத்துகளை விற் பனை செய்வதைத் தடுக்க இரு வழிகள் உள்ளன. ஒன்று, ‘பதற்றம் நிறைந்த பகுதிகள்’ சட்டத்தை இயற்ற வேண்டும் என்று மாநில அரசை வலியுறுத்த வேண்டும். அல்லது, அத்தகைய சொத்துகளை பலவந்தப்படுத்தி கையகப்படுத்த வேண்டும். சம்பந் தப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக பல ஆண்டுகள் ஆகிவிடும்.

இந்த வீட்டை வாங்கி, குடியேறி யுள்ள முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த நபர், அடுத்த 48 மணி நேரத் திற்குள் காலி செய்ய வேண்டும். அதற்கு மறுத்தால், கற்கள், டயர் கள், தக்காளிகளுடன் அவரின் அலுவலகத்தை முற்றுகையிடுங் கள். அதில் தவறேதும் இல்லை.

ராஜீவ் காந்தியை கொன்றவர் களே தூக்கிலிடப்படாமல் உள்ள னர். எனவே, வீட்டை காலி செய்ய வைப்பதால் தொடரப்படும் வழக்கைப்பற்றி பயப்பட வேண் டாம். வழக்கு நீண்ட நாள்களுக்கு நடைபெறும். இவ்வாறு பிரவீண் தொகாடியா பேசினார்.

அந்த வீட்டை போராட்டக்காரர் கள் தாக்கக்கூடும் என்பதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை

இதுகுறித்து பாவ் நகர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பி.கே.சோலங்கி கூறுகையில், “பிர வீண் தொகாடியாவின் பேச்சு அடங்கிய வீடியோ பதிவை அனுப்பி வைக்குமாறு எங்களின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள் ளோம். அதைப் பார்த்த பின்புதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க உள்ளோம்” என்றார்.

ஆர்.எஸ்.எஸ். மறுப்பு

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், “தொகாடியா அவ்வாறு பேசவில்லை. அவரின் பேச்சு திரித்துக் கூறப்பட் டுள்ளது. இதுபோன்ற பிரிவினை சிந்தனையை நாங்கள் தெரிவிப் பதில்லை. அனைத்து மக்களையும் ஒன்றாகத்தான் நினைப்போம். ஒரே மக்கள், ஒரே தேசம் என்பதில் நம்பிக்கை வைத்துள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT