CalendarPg

14-ம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம்: விஜயகாந்த் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பங்கேற்கவுள்ளார்.

இதுதொடர்பாக தேமுதிகதலைமையகம் வெளியிட்ட அறிக்கை: தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 14-ம் தேதி காலை சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என். பேலஸ் திருமணமண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடுகிறார்.

இந்த கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் வெளிமாநில செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்என அறிவுறுத்தப்படுகின்றனர்.

SCROLL FOR NEXT