“குஜராத் மாடல்” வளர்ச்சி என்று பாஜகவினர் கூறுவது பெரும் பொய். அங்கு என்ன மாதிரியான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அக்கட்சியினர் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சீதாபூரில் புதன்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர் இது தொடர்பாக பேசியது:
குஜராத் மாடல் வளர்ச்சி என்று பாஜகவினர் நாடு முழுவ தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அது என்ன என்பது யாருக்கும் தெரிய வில்லை. அவர்கள் கூறுவது மிகப் பெரிய பொய். அப்படி இல்லையென்று கூறினால் பாஜகவினர்தான் அது குறித்து விளக்க வேண்டும் என்றார்.
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசிய அகிலேஷ் யாதவ், பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளர் என்பவர் உண்மையாகவே அக் கட்சியின் வேட்பாளர் அல்ல. விஎச்பி, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட் பாளர். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர்கள் மதவாதத்தைக் கையில் எடுத்துள் ளனர்.
மக்களுக்கு பயனளிக்கும் செயல் திட்டங்கள் எதுவும் பாஜகவிடம் கிடையாது. 2ஜி ஊழல், 3ஜி ஊழல் என்று கூறி தான் கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் அரசியல் நடத்தி வந்தனர். உங்களில் எத்தனை பேருக்கு இந்த ஊழல்கள் குறித்து முழுமையாகத் தெரியும்?
உண்மையில் 2ஜி ஊழல் என்பதே பாஜக ஆட்சி காலத் தில் தொடங்கியதுதான். 3ஜி ஊழல் காங்கிரஸ் ஆட்சியில் நடை பெற்றது. ஊழல் செய்வதில் அந்த இரு கட்சிகளும் ஒரு நாண யத்தின் இரு பக்கங்கள் போன்றவை.
நாடு முழுவதும் தங்களுக்கு செல்வாக்கு உள்ளதாக பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆந்திரா, தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அவர்கள் எத்தனை இடங்களில் வென்றார் கள் என்று கூற முடியுமா? உண்மையில் மூன்றாவது அணியைச் சேர்ந்த கட்சிகள்தான் அங்கு உள்ளன. அவைதான் அதிக இடங்களில் வெற்றி பெறும்.
உத்தரப் பிரதேசத்திலும் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும்போது மூன்றாவது அணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும். இதில் சமாஜவாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் முக்கியப் பங்கு வகிப்பார் என்று அகிலேஷ் யாதவ் பேசினார்.