மற்றவை

விஜயகாந்த் பிரச்சாரம் பாதியில் ரத்து: தொண்டை சரியில்லை என தகவல்

செய்திப்பிரிவு

திண்டிவனத்தில் அன்புமணியுடன் இணைந்து பிரச்சாரம் செய்யவிருந்த விஜயகாந்த், திடீரென அதை ரத்து செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் காலை முதல் எம்எல்ஏ வெங்கடேசன் வீட்டில் தங்கி இருந்த விஜயகாந்த் சனிக்கிழமை மாலை உளுந்தூர்பேட்டையில் தேமுதிக வேட் பாளர் உமாசங்கரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டை வலி உள்ளதாகக் கூறி அவசர அவசரமாக பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட அவர், சிகிச்சைக்காக மருத்துவமனை செல்வதாகக் கட்சி நிர்வாகிகளிடம் கூறி னார். மேலும், அடுத்தடுத்து பிரச்சாரம் செய்ய இருந்த திருக்கோவிலூர், திண்டி வனம் கூட்டங்களையும் அவர் ரத்து செய்தார். எனினும், அவர் மருத்துவ மனைக்குச் செல்லாமல் எம்எல்ஏ வெங்க டேசன் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி , புதுச்சேரி பாமக வேட்பாளர் அனந்தராமன் ஆகியோர் வருவதாகக் கூறியதால் அவர்களுக்காகக் காத்திருந்தார். இருவருமே வராததால் அவர் எரிச்சலடைந்ததாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை இரவு விஜயகாந்தும், அன்புமணியும் இணைந்து திண்டிவனத் தில் பிரச்சாரம் செய்ய இருந்ததாகக் கூறப் பட்டது. பின்னர் தைலாபுரம் தோட்டத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருப் பதாகவும் பாமகவினர் தெரிவித்தனர். விஜயகாந்த் தைலாபுரம் தோட்டத்திற்கு வரும்போது ராமதாஸைச் சந்திப்பார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், விஜய்காந்த் பிரச்சாரத்தைப் பாதியில் ரத்துசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பிரச்சாரத்தை ரத்து செய்தால் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் உளுந்தூர் பேட்டையில் மட்டும் பிரச்சாரம் செய்து அதையும் உடல்நிலையைக் காரணம் காட்டி ரத்து செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பிரச்சாரம் செய்ததால் தொண்டை வலி ஏற்பட்டதாக தேமுதிகவின் ஆதரவு தொலைக்காட்சி அறிவித்தது.

மருத்துவமனைக்கு செல்லாமல் எம்.எல்.ஏ வீட்டிற்கு ஏன் அவர் சென்றார் என்பதைத் தெரிந்துகொள்ள, எம்.எல்.ஏ வெங்கடேசனைத் தொடர்பு கொண்டபோது மொபைலை அவர் எடுக்கவே இல்லை.

SCROLL FOR NEXT