விவாதக் களம்

விவாதக் களம்: மீண்டு(ம்) வருவாரா வடிவேலு?

வி. ராம்ஜி

கொடி கட்டிப் பறந்தவர் எனும் வார்த்தை பிரபலம். அது... வைகைப்புயல் வடிவேலுக்கு ரொம்பவே பொருந்தும்.

சாதாரண துணை நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவைக் கூட்டத்தில் சைடில் நின்று, சிரிக்க வைத்து, ஒருகட்டத்தில் தனி ராஜாங்கமே நடத்தி, பட்டையைக் கிளப்பினார் வடிவேலு, படத்துக்கு ஹீரோ, ஹீரோயினை முடிவு செய்வதற்கு முன்பே, படம் எடுக்க முடிவானதுமே முதலில் புக் செய்யப்படுபவர் வடிவேலுவாகத்தான் இருக்கும்.

யார் கதாநாயகனாக இருந்தாலும், டைட்டிலில் பெயர் போடுவதில் துவங்கி, காட்சிக்குக் காட்சி விசில் பறந்ததெல்லாம்... ரசிக மனங்களில் வடிவேலுவுக்கான இடத்தை உணர்த்தியது. இன்றும் அந்த இடம் நிரந்தரம்.

ஹீரோவாகி, இடையே தொய்வு ஏற்பட்டு, மீண்டும் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று உறுதியுடன் இருந்ததால், நஷ்டம் அவருக்கில்லை. நம்மைப் போன்ற ரசிகர்களுக்குத்தான்!

பல வருடங்கள் ஓடிவிட்டன. பலப்பல காமெடி நடிகர்கள் வந்து சென்று, வந்து சென்று... இருக்கிறார்கள். இன்னமும் இருக்கிறது... காத்திருக்கிறது... வடிவேலுவுக்கான இடம். அந்த இடத்தை வடிவேலுவால் மட்டுமே நிரப்ப முடியும்! நிரப்புவாரா வைகைப்புயல். என்ன செய்தால் மீண்டும் கிடைக்கும் ராஜாங்கம். உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள் வாசகர்களே!

SCROLL FOR NEXT