கன்னியாகுமரி

திரும்பிப் பார்ப்போம்

செய்திப்பிரிவு

கேரளாவுடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், மார்ஷல் நேசமணி, ம.பொ.சி உள்ளிட்ட தலைவர்களின் தொடர் போராட்டத்தினாலும், 36 பேரின் உயிர்த் தியாகத்தினாலும் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி தமிழகத்துடன் இணைந்தது. இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பின்பு துவங்கிய இந்தப் போராட்டம், ஒன்பது ஆண்டுகள் நடந்தது. இந்திய அளவில் தரமான ரப்பர் விளையும் பகுதி கன்னியாகுமரிதான். இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் ரப்பர் நாற்று செல்கின்றது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் குமரி மாவட்டம் இருந்தபோது. கேரள மாநிலத்தின் நெற்களஞ்சியமாக இருந்ததும் குமரி மாவட்டம்தான். காமராஜர் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT