தேர்தல் 2014

கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு இயக்குநர் நியமனம்

செய்திப்பிரிவு

சென்னை: சுகாதாரத்துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்த டாக்டர் பார்த்தசாரதி, கிண்டி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையின் இயக்குநராக நியமிக்கப்படுகிறார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வராக இருந்த டாக்டர் கே.நாராயணசாமி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பதவி காலியானது. அக்கல்லூரி முதல்வராக டாக்டர் முத்துச் செல்வன் நியமிக்கப்படுகிறார்.

SCROLL FOR NEXT