இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் இன்று பதவியேற்பு

By செய்திப்பிரிவு

லண்டன்: இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் இன்று மாலை பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20-ம் தேதி அறிவித்தார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக முடியும் என்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக கட்சியின் நாடாளுமன்றக் குழு ரிஷி சுனக்கை நேற்று தேர்வு செய்தது. இதையடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பிக்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வாகியதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், தற்போது பிரதமராக இருக்கும் லிஸ் ட்ரஸ், இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணி அளவில் தனது அமைச்சரவையைக் கூட்ட இருக்கிறார். இதையடுத்து, மதியம் 2.45 மணி அளவில் பிரதமர் தனது வீட்டில் இருந்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்த இருக்கிறார். இதையடுத்து, மன்னர் மூன்றாவது சார்லசை சந்திக்கச் செல்லும் லிஸ் ட்ரஸ், அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி வழங்க இருக்கிறார். அதன் பிறகு, மன்னரிடம் இருந்து ரிஷி சுனக்கிற்கு அழைப்பு விடுக்கப்படும். மன்னரின் அழைப்பை ஏற்று பக்கிங்ஹாம் அரண்மனைக்குச் செல்லும் ரிஷி சுனக்கிற்கு, மன்னர் மூன்றாம் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு ரிஷி சுனக் பதவி ஏற்பார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

ராணி இரண்டாம் எலிசபெத் தனது பதவிக்காலத்தில் 15 பேருக்கு பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். லிஸ் ட்ரஸ்தான் அவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்த கடைசி பிரதமர். இங்கிலாந்தின் மிக குறுகிய கால பிரதமரும் லிஸ் ட்ரஸ்தான். மன்னர் சார்லஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கும் முதல் பிரதமர் ரிஷி சுனக். | வாசிக்க > பிரிட்டனின் புதிய பிரதமர்: யார் இந்த ரிஷி சுனக்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

8 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

32 mins ago

சினிமா

41 mins ago

வணிகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

மேலும்