அபுதாபியை தாக்க வந்த இரு ஏவுகணைகளை அழித்தோம்: ஐக்கிய அரபு அமீரகம்

By செய்திப்பிரிவு

அபுதாபி: ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவிய இரு ஏவுகணைகளை பதிலடி தாக்குதலில் அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில், “தலைநகர் அபுதாபியை நோக்கி இன்று (திங்கட்கிழமை) ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் வீசிய இரு ஏவுகணைகளை எங்கள் ராணுவம் தாக்கி அழித்தது. ஐக்கிய அரபு அமீரகம் எந்தவிதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது. நாட்டை பாதுகாக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் கடந்த திங்கட்கிழமை ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள்; ஒருவர் பாகிஸ்தானியர்.

இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி, ஐக்கிய அரபு படையினர் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும் ஏமனின் சடா பகுதியில் உள்ள சிறைச்சாலை மீது சவுதிப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் வரை பலியாகினர். சவுதியின் இத்தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்தது. இதன் காரணமாக வளைகுடா பதற்றம் நிலவுகிறது.

ஏமனில் நடப்பது என்ன? - தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

26 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்