திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி: பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழிபெயர்க்க கெடுபிடி

By ஏஎன்ஐ

திபெத் சுயாட்சி பிராந்தியத்தில் தனது கட்டுப்பாட்டை இறுக்கும் விதமாக பாடப் புத்தகங்களை மாண்டரினில் மொழிபெயர்க்குமாறு திபெத் மதகுருக்களுக்கு சீனா நெருக்கடி கொடுத்துவருகிறது.

திபெத்தில் உள்ள புத்த துறவிகளும், பெண் பிக்குணிகளும் சீன மொழியில் தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் நிர்பந்திக்கப்படுகின்றனர்.

கடந்த மாதம் கிங்காய் மாகாணத்தில் சீனா மூன்று நாட்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. அதன் பின்னரே திபெத்துக்கு இது மாதிரியான நெருக்கடிகளைக் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ரேடியோ ஃப்ரீ ஏசியா வானொலி செய்தியில், சீனாவின் இந்த நெருக்கடி ஒருவிதத்தில் அதிகார துஷ்பிரயேக முயற்சி என்பதைத் தவிர வேறேதும் இல்லை. திபெத்தில் உள்ள புத்தகங்களை எல்லாம் மாண்டரின் மொழிக்கு மாற்றச் சொல்வது சரி. ஆனால் அதை யார் மொழிபெயர்ப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி. இந்தத் திட்டத்தின் பின்னால் எந்த நல்லெண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சீன அதிகாரிகள் இரண்டு திபெத் மாணவர்களைக் கைது செய்தனர். திபெத் பள்ளிகளில் இனி சீன மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும் என்று தெரிவித்தை எதிர்த்துப் போராடியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து சீனா இவ்வாறாக திபெத்துக்கு நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

கருத்துப் பேழை

12 mins ago

சுற்றுலா

49 mins ago

சினிமா

54 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்