உலகம்

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அனுப்பியது பிரிட்டன்

செய்திப்பிரிவு

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கரோனா 2-வதுஅலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. கரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் உபகரணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உலக நாடுகள் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

அந்த வகையில் 18 டன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் 1,000 வென்டிலேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. இந்த உயிர்காக்கும் உபகரணங்கள் ஏற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டனோவ்-124 பெல்பாஸ்ட் நகரிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டுள்ளது. இந்த விமானம் இன்று காலை டெல்லி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் டோமினிக்ராப் கூறும்போது, “கரோனா பெருந்தொற்றை சமாளிக்க பிரிட்டனும் இந்தியாவும் இணைந்து பணியாற்றி வருகிறது. அந்த வகையில்பிரிட்டனின் வடக்கு அயர்லாந்தில்உபரியாக உள்ள ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை இந்தியாவுக்கு அனுப்பி உள்ளோம்” என்றார்.

SCROLL FOR NEXT