ஈரானில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 1,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,000 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து சினுவா வெளியிட்ட செய்தியில், “ஈரானில் நேற்று மட்டும் 1,194 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா தொற்றுக்கு 80,000க்கு அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

கரோனாவால் கடும் பாதிக்குப்பு உள்ளான நாடுகளில் ஈரானும் ஒன்று. கரோனா பாதிப்பு மட்டுமல்ல அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில் ஊரடங்கைத் தளர்த்தும் முடிவை ஈரான் அரசு சமீபத்தில் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஈரானில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. வணிக வளாகங்கள் செயல்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றை கட்டுபடுத்துவது தொடர்பாக ஒத்துழைப்பு அளிப்பது குறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியும், துருக்கி அதிபர் எர்டோகன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினர்.

துருக்கியில் 98,674 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தியுள்ளது. 2,376 பேர் பலியாகி உள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE