கரோனா வைரஸ்; இத்தாலியில் ஒரே நாளில் 475 பேர் பலி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் இதற்கு பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், இத்தாலியில் வைரஸைக் கட்டுப்படுத்த பொதுக் கூட்டங்களுக்குத் தடை உட்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது.

இத்தாலியில் மட்டும் இதுவரை 24,747 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை அந்த நாட்டில் 1,809 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அந்த நாட்டில் கோவிட்-19 வைரஸ் பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் ரோமில் உள்ள தன்னாட்சி பெற்ற நாடான வாடிகனும் கடுமையான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. வைரஸ் பரவல் அச்சம் காரணமாக நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தரும் வாடிகனில் உள்ள புகழ்பெற்ற தேவாலயம் தற்போது வெறிச்சோடிக் காணப்படுகிறது.

எனினும் இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத்தாலி நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 475 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அங்கு பலி எணணிக்கை 2,978 ஆக அதிகரித்து இருக்கிறது. 35,713 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

12 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்