பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை: இந்திய கிரிக்கெட் அணிக்கு சவால் விடுத்தவர்

சமூக வலைத்தளங்களில் பிர பல மான பாகிஸ்தான் நடிகை குவான் டீல் பலோச்சை அவரது சகோதரர் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள் ளார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரைச் சேர்ந்தவர் குவான்டீல் பலோச் (26). நடிகையும் மாடலுமான அவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

இந்திய அணிக்கு சவால்

கடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியை பாகிஸ்தான் அணி வெல்லும் என்று சவால் விடுத்தார். பாகிஸ்தான் அணி வெற்றி பெறும்போது ஆடை யின்றி நடனமாட தயார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் அப்ரிதியை திட்டி தீர்த்து வீடியோ வெளி யிட்டார். அண்மையில் அவரது சர்ச்சைக்குரிய இசை ஆல்பம் ஒன்றும் வெளியானது.

சமூகவலைத்தளம் மூலம் உல களாவிய அளவில் அவர் பிரப லமானதால் இந்திய தொலைக் காட்சியின் ‘பிக்பாஸ்’ ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

3 முறை திருமணம்

தெஹ்ரிக் இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக் கெட் அணியின் முன்னாள் கேப்ட னுமான இம்ரான்கானை காதலிப் பதாகவும் அவரை திரும ணம் செய்ய காத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் குவான் டீல் பகிரங்கமாக அறிவித்தார்.

இதனிடையே குவான்டீலுக்கு ஏற்கெனவே 3 முறை திருமண மாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து அவர் கூறியபோது பெற்றோர் வற்புறுத் தலால் இளம் வயதில் கட்டாய திருமணம் செய்து விவகாரத்து பெற்றுவிட்டதாகக் தெரிவித்தார். அவருக்கு 7 வயதில் ஒரு மகன் இருப்பதையும் ஒப்புக்கொண்டார்.

கொலை மிரட்டல்

பாகிஸ்தான் நட்சத்திரங்களில் இணையத்தில் அதிகம் தேடப்படும் 10 பேரில் ஒருவராக குவான்டீல் பிரபலமடைந்தார். பழமை வாதிகள் அவருக்கு நேரடியாக கொலை மிரட்டல் விடுத்தனர். இதன்காரணமாக கராச்சியில் வசித்து வந்த அவர் பாதுகாப்பு கருதி முல்தானில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அவருக்கு உடன் பிறந்த 2 சகோ தரிகளும் 5 சகோதரர்களும் உள்ளனர். குவான்டீலின் சமூக வலைத்தள வாழ்க்கையை குடும்பத்தினர் விரும்பவில்லை.

கழுத்தை நெரித்து கொலை

அந்த வகையில் நேற்று முன் தினம் இரவு குவான்டீலுக்கும் அவரது தம்பி வாசிம் அகமதுவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன்பின் நள்ளிரவில் குவான்டீல் தூங்கி கொண்டிருந்தபோது அவரது அறைக்கு சென்ற வாசிம், சகோதரியின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்தார்.

இந்த கவுரவ கொலை குறித்து முல்தான் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோ டிய வாசிமை அவர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் கடந்த ஓராண் டில் மட்டும் 1100 பெண்கள் கவுரவ கொலை செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

தமிழகம்

8 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்