சுதந்திரமான, பாதுகாப்பான நாடு இந்தியா: பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் காஷ்மீர் செய்தியாளர் புகழாரம்

By செய்திப்பிரிவு

லண்டன்: ஜம்மு-காஷ்மீர், லடாக் பகுதிகள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று 1994-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த தினம் ஜம்மு- காஷ்மீர் சங்கல்ப தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி பிரிட்டனில் செயல்படும் ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் அந்த நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 21-ம் தேதி சிறப்பு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் எம்.பி.க்கள் பாப் பிளாக்மேன், தெரசா, எலியட், வீரேந்திர சர்மா மற்றும் பிரிட்டிஷ் அரசியல் தலைவர்கள் 100 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலரும் செய்தியாளருமான யானா மிர் பேசியதாவது:

எனது தாய் பூமி காஷ்மீர். இது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. சுதந்திரமான, பாதுகாப்பான நாடாக இந்தியா விளங்குகிறது. நான் எந்த நாட்டிலும் அடைக்கலம் கோரத் தேவையில்லை. நான் மலாலா கிடையாது. தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிவிட்டார். பிரிட்டன், பாகிஸ்தானில் வசிப்பவர்கள், சிலசர்வதேச ஊடகங்கள், மனித உரிமை அமைப்புகள் எனது தாய்நாடான இந்தியா குறித்து அவதூறாக விமர்சிக்கின்றனர். பிரிட்டனில் இருந்து கொண்டு இந்தியாவை பற்றி அறிந்து கொள்ள முடியாது. தீவிரவாதத்தால் ஆயிரக்கணக்கான காஷ்மீர் தாய்மார்கள் தங்கள் மகன்களை இழந்துள்ளனர். உங்களது விஷம கருத்துகளால் பிரிவினையைத் தூண்ட வேண்டாம். காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகின்றனர். ஜெய் ஹிந்த்.

இவ்வாறு அவர் பேசினார். யானா மிர் நொய்டாவில் உள்ளபாரத் எக்ஸ்பிரஸ் செய்தி சேனலின், ஸ்ரீநகர் நிருபராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்