போட்டித்தேர்வு தொடர் 31: டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வுக்கு தயாரா?

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 31 -

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நாளை (ஜூலை 24) நடைபெறுகிறது. இதற்காக திட்டமிட்டு படித்து, நம்பிக்கையுடன் தேர்வு எழுதும் அனைவருக்கும் வாழ்த்துகள்! வெற்றி என்பது உடனடியாக கிடைப்பது அல்ல.

எந்த ஒருபோட்டித் தேர்விலும் தேர்ச்சி பெறநிலையான மற்றும் கவனம் செலுத்தும் தயாரிப்பு தேவை. இப்போதுகுறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெறுவதற்கான அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்துவோம்.

குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற, நாம் தயார் செய்து பயிற்சி செய்ய வேண்டிய 5 பாடப் பகுதிகள் உள்ளன. இந்திய அரசியல் அடிப்படைகளில் முதலில் கவனம் செலுத்துங்கள். இப்பகுதியில் இருந்து 10-15 கேள்விகள் வரும்.

இந்திய அரசியல்

1) நாடாளுமன்றம் என்பது இந்தியாவின் சட்டம் இயற்றும் உச்ச அமைப்பாகும். இது குடியரசுத் தலைவர் மற்றும் மாநிலங்களவை, மக்களவை ஆகிய 2 அவைகளை உள்ளடக்கியது. நாடாளுமன்றத்தை கூட்டி ஒத்திவைக்க அல்லது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

இந்திய அரசியலமைப்பு 1950 ஜன.26-ல்நடைமுறைக்கு வந்தது. புதிய அரசியலமைப்பின் கீழ் முதல் பொதுத் தேர்தல்கள் 1951-52 ஆண்டில் நடத்தப்பட்டன தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாடாளுமன்றம் 1952 ஏப்ரலில் நடைமுறைக்கு வந்தது.

‘பாரத்’ எனப்படும் இந்தியா, மாநிலங்களின் ஒன்றியம். இது இறையாண்மை கொண்ட சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு.1949 நவ.26-ம் தேதி அரசியல்நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 1950 ஜன.26-ம் தேதி நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் குடியரசு நிர்வகிக்கப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டம் 74(1) பிரிவு,குடியரசுத் தலைவருக்கு உதவுவதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் பிரதமரைக் கொண்ட ஓர் அமைச்சரவை இருக்க வேண்டும், இதன்மூலம், பிரதமரை தலைவராக கொண்ட அமைச்சரவைக்கு உண்மையான நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2) குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர் போன்ற அரசியல் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் குழு

3. புதிய மாநிலங்களை உருவாக்குதல் மற்றும் தற்போது உள்ள மாநிலங்களின் பகுதிகள், எல்லைகள், பெயர்களை மாற்றுதல்.

(பகுதி-III) அடிப்படை உரிமை

17. தீண்டாமை ஒழிப்பு
21A. கல்வி உரிமை
24. குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தல்.
29. சிறுபான்மையினர் நலன்

(பகுதி-IV) மாநிலக் கொள்கையின் நேரடிக் கோட்பாடுகள்
39A. சம நீதி, இலவச சட்ட உதவி
40. கிராம பஞ்சாயத்துகளின் அமைப்பு.
43A. தொழில் நிர்வாகத்தில் தொழிலாளர்களின் பங்கேற்பு
43B கூட்டுறவு சங்க மேம்பாடு

(பகுதி-IVA) 11 அடிப்படைக் கடமைகள்

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மாநில ஆளுநர்கள்:

52. குடியரசுத் தலைவர்
54. குடியரசுத் தலைவர் தேர்தல்.
61. அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறை.
63. குடியரசு துணைத் தலைவர்
64. துணைத் தலைவர் மாநிலங்களவையின் அதிகாரபூர்வ தலைவராக இருக்க வேண்டும்
72. மன்னிப்பு வழங்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரம்நாடாளுமன்றம்
80. மாநிலங்களவை
81. மக்களவை
110. Definition of ‘Money Bills’.
112. ஆண்டு நிதி அறிக்கை(Budget)
114. ஒதுக்கீட்டு மசோதாக்கள்.

அதிகாரிகள்/ ஆணையம்

148. இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்.
280. நிதி ஆணையம்.
315. மத்திய, மாநிலங்களுக்கான பொது சேவை ஆணையங்கள்.
338. பட்டியல் சாதிகளுக்கான தேசிய ஆணையம்.

(பகுதி-IX) பஞ்சாயத்துகள்

243A. கிராமசபை.
243D. இட ஒதுக்கீடு
243K. பஞ்சாயத்து தேர்தல்.

(பகுதி-IXA) நகராட்சிகள்

243S. வார்டு குழுக்கள்
243ZD. மாவட்ட திட்டமிடல் குழு
243ZE. பெருநகர திட்டமிடலுக்கான குழு

அவசரகால விதிகள்

352. அவசரநிலை பிரகடனம்.
360. நிதி அவசரகால விதிகள்
அரசியலமைப்பின் திருத்தம்
368.அரசியலமைப்பு, நடைமுறையை திருத்துவதற்கு நாடாளுமன்றத்தின் அதிகாரம்

(அடுத்த பகுதி நாளை வரும்)

போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்