போட்டித்தேர்வு தொடர் 29: பொருளாதார மாற்றங்கள்

By செய்திப்பிரிவு

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி. - 29 -

விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA): நாடாளுமன்றத்தில் 1985 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் சட்டத்தின் கீழ் இந்திய அரசால் இது நிறுவப்பட்டது.

இந்த ஆணையம், வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்க உள்கட்டமைப்பு மற்றும் தரத்தை மேம்படுத்துவது, சந்தைகளின் வளர்ச்சி ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது உள்நாட்டில் பெறப்பட்ட புவியியல் குறியீடுகள் (GI) குறியிடப்பட்ட மற்றும் உள்நாட்டு விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

2020-21 மற்றும் நடப்பு நிதி ஆண்டில் டிராகன் பழம், காப்புரிமை பெற்ற கிராமத்து அரிசி, பலாப்பழம், ஜாமூன், பர்மிய திராட்சை, மஹுவா பூக்கள், பஃப்ட் அரிசி ஆகியவை இந்தியாவால் ஏற்றுமதி செய்யப்படும் சில இன மற்றும் GI குறியிடப்பட்ட தயாரிப்புகளில் அடங்கும்.

மாம்பழத்தின் GI வகைகள், GI குறியிடப்பட்ட ஷாஹி லிச்சி, பாலியா கோதுமை, மதுரை மல்லி, மிஹிதானா, சீதாபோக், தஹானு கோல்வாட் சப்போட்டா, ஜல்கான் வாழை, வாழக்குளம் அன்னாசி மற்றும் மறையூர் ஜிகரி போன்றவையும் இதில் அடங்கும்.

இந்தியாவில் வணிக எதிர்பார்ப்பு குறியீடு (BEI-Business Expectation Index) என்பது 9 வணிகக் குறிகாட்டிகளின் நிகரப் பிரதிபலிப்பு (வெவ்வேறு தொழில் குழுவின் GVA பங்கு) என கணக்கிடப்படுகிறது.

ஒன்பது குறிகாட்டிகள்:

1. ஒட்டுமொத்த வணிக நிலைமை

2. உற்பத்தி

3. ஆர்டர் புத்தகங்கள்

4. மூலப்பொருள் சரக்கு

5. முடிக்கப்பட்ட பொருள் சரக்கு

6. லாப வரம்புகள்

7. வேலைவாய்ப்பு

8. ஏற்றுமதிகள்

9. திறன் பயன்பாடு.

Balance of Payments (BoP):

‘பேலன்ஸ் ஆஃப் பேமென்ட்ஸ்’ என்பது உலகின் பிற பகுதிகள் உடனான பொருளாதார பரிவர்த்தனைகளை சுருக்கமாக கூறுகிறது. இந்த பரிவர்த்தனைகளில் பொருட்கள், சேவைகள், நிதி சொத்துகளின் ஏற்றுமதி, இறக்குமதிகள், வெளிநாட்டு உதவி போன்றவையும் அடங்கும்.

இது 2 பரந்த கணக்குகளை கொண்டுள்ளது:

* நடப்புக் கணக்கு

* ஒருங்கிணைந்த மூலதனம், நிதிக் கணக்கு

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இரு பெரிய பொருளாதார நெருக்கடிகளை சந்தித்துள்ளது, அவை 1991 மற்றும் 2013-ல் நடந்த ‘பேலன்ஸ் ஆஃப் பேமென்ட் (BOP)’ சிக்கல்களுடன் தொடர்புடையது. பணம் செலுத்துவதற்கு போதுமானஅந்நியச் செலாவணி இருப்பு இல்லாததன் விளைவாக, 1991-ல்நெருக்கடியான BOP காரணமாகசிக்கல் உருவானது. பொருளாதாரத்தை உலகுக்கு திறக்க, சர்வதேச நிதியத்தில் (IMF) இருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது தாராளமயமாக்கல் (Liberalisation), தனியார்மயமாக்கல் (Privatisation), உலகமயமாக்கல் (Globalisation) கொள்கை மூலம் பொருளாதார மாற்றங்களுக்கு வழிவகுத்தது.

Balance of Trade என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நாட்டின் இறக்குமதி - ஏற்றுமதி மதிப்புக்கு இடையே உள்ள வித்தியாசம்.

Current Account Deficit (CAD) நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஒரு நாடு ஏற்றுமதி செய்வதைவிட அதிகமாக இறக்குமதி செய்வதைக் குறிக்கிறது.

நுகர்வோர் விலைக் குறியீடு

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO), Base year 2012=100 என்ற அடிப்படையில் கிராமப்புறம், நகர்ப்புறம், மற்றும் இரண்டுக்குமான நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை (Consumer Price Index) வெளியிடுகிறது

நுகர்வோர் விலைக் குறியீடு 4 வகைப்படும்.

1. விவசாயத் தொழிலாளர்கள்

2. தொழில் துறை தொழிலாளர்கள்

3. கிராமப்புறத் தொழிலாளர்கள்

4. ஒருங்கிணைந்த (CPI-Combined) தொழிலாளர்கள்

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 1,114 நகர்ப்புற சந்தைகளில் இருந்தும், 1,181 கிராமப்புற சந்தைகளில் இருந்தும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின், களப்பணி பிரிவினரால், விலை குறித்த புள்ளி விவரங்கள் வாராந்திர பதிவேட்டில் சேகரிக்கப்படுகின்றன.

பணவீக்க விகிதம்

அகில இந்திய பணவீக்க விகிதமானது, பொது குறியீடுகள், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் வெளியிடப்படுகிறது. 2022 ஏப்ரலில் 99.9 சதவீத கிராமங்கள், 98.3 சதவீத நகர்ப்புற சந்தைகளில் இருந்து விலை விவரங்களை தேசிய புள்ளியியல் அலுவலகம் சேகரித்தது.

ஒவ்வொரு மாதமும் பணவீக்க விகிதம், நுகர்வோர் விலைக் குறியீட்டின் (பொது) அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிடப்படுகிறது. பணவீக்க விகிதங்களை நுகர்வோர் உணவு விலைக் குறியீட்டின் அடிப்படையில் சதவீதத்தில் கணக்கிட்டபோது, ஏப்ரலில் (தற்காலிகம்) கிராமப்புறங்களில் 8.50 ஆகவும், நகரங்களில் 8.09 ஆகவும், இரண்டும் இணைந்து 8.04 ஆகவும் இருந்தன.

(அடுத்த பகுதி நாளை வரும்)

முந்தைய பகுதி: போட்டித்தேர்வு தொடர் 28: மக்களவையின் சிறப்பம்சங்கள்

போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகளையும், உங்கள் சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதில்களையும் பெற, https://www.htamil.org/00532 லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்