இன்று என்ன நாள்

ஜன.30: இன்று என்ன? - நினைவில் நிலைபெற்ற மகாத்மா

செய்திப்பிரிவு

தேசத் தந்தை என்று போற்றப்படுபவர் காந்தியடிகள். இவர் 1869 அக்டோபர் 2-ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ராஜ்கோட்டில் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். 1893-ல் சட்டம் பயில தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டார். அங்கு ரயில் பயணத்தின்போது நிற வெறியினால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, அங்கு வாழும் இந்தியர்களின் உரிமைகளை மறுக்கும் சட்டங்களை எதிர்த்து தாதாபாய் நௌரோஜிக்கு கடிதம் எழுதினார். 1915-ல்இந்தியா திரும்பினார். சாமானிய இந்திய மக்களின் துயரம் கண்டு மனம் வெதும்பி 1917-ல் சம்பாரண் சத்தியாகரகத்தில் மக்களை திரட்டி போராடினார்.

தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக கருதி சிறுபிராயம் முதல் 1921-ம் ஆண்டு வரையிலான தனது வாழ்க்கை அனுபங்களை, ‘சத்திய சோதனை’ என்ற சுயசரிதையாக எழுதினார். 1933-ம் ஆண்டு ஹரிஜன் இதழை ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடங்கினார்.

1946-ல் தென்னிந்தியா வந்த காந்தி தீண்டாமையைக் கண்டித்து பிரசாரம் செய்தார். நாட்டின் இந்து-முஸ்லிம் மக்களின் ஒற்றுமையே தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள் என்று முழங்கினார். 1948 ஜனவரி 30-ம் தேதி பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்த காந்தி மீது நாதுராம் கோட்சே நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தார்.

SCROLL FOR NEXT