இன்று என்ன? - மூன்றுமுறை முதல்வரான மம்தா

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க மக்களால் ‘அக்கா’ என்று அழைக்கப்படுபவர் மம்தா பானர்ஜி. இவர் கொல்கத்தாவின், அஸ்ரா பகுதியில் 1955 ஜனவரி 5-ம் தேதி பிறந்தார். கொல்கத்தாவில் உள்ள பசந்தி தேவி கல்லூரியில் பட்டம் பெற்று, ஜோகேஷ் சந்திர சௌதுரி சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

இவர் 1970-ல் தனது அரசியல் வாழ்க்கையை காங்கிரஸ் கட்சியில் தொடங்கினார். 1984-ல் நாடாளுமன்ற தேர்தலில் வென்று மிகச் சிறிய வயதில் நாடாளுமன்றம் சென்றார் மம்தா. 1997-ம் ஆண்டு காங்கிரசிலிருந்து விலகி அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார்.

1999-ம் ஆண்டு ரயில்வே அமைச்சராகவும், 2004-ல் எரிசக்தித் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். 2009-ல் ரயில்வே அமைச்சராகப் பதவியேற்று விரைவு ரயில், ‘மகளிர் மட்டும்' செல்லும் புறநகர் ரயில்களை அறிமுகப்படுத்தினார்.

2011, 2016, 2021-ம்ஆண்டு என மூன்று முறை சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மேற்கு வங்கத்தின் முதல்வராக ஆட்சி புரிந்து வருகிறார் மம்தா பானர்ஜி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்