உயர் கல்விக்கு திறவுகோல் - 17: வேளாண் பல்கலைக்கழகங்களில் பயிலலாம்!

By எஸ்.எஸ்.லெனின்

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் வேளாண்மை, தோட்டக்கலை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு இளநிலை அறிவியல் படிப்புகளில் சேர, அதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு (ICAR AIEEA - Indian Council of Agriculture Research-All India Entrance Exam for Admission) எழுத வேண்டும்.

ICAR AIEEA நுழைவுத் தேர்வினை தேசியதேர்வு முகமையான NTA நடத்துகிறது. இந்தநுழைவுத் தேர்வில் தகுதிக்கான மதிப்பெண்களைப் பெறுவதன் மூலம் நாடெங்கிலும் உள்ளமாநில மற்றும் மத்திய அரசின் வேளாண் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் என 74 வேளாண் பல்கலைக்கழகங்களில் சேர வாய்ப்பாகும்.

விண்ணப்பிக்கத் தகுதி

பிளஸ் 2-வில் இயற்பியல் வேதியியலுடன் கணிதம் அல்லது உயிரியல்/வேளாண்மை பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். தேர்ச்சியுடன் குறைந்தபட்ச மதிப்பெண்ணாக, எஸ்.சி/. எஸ்.டி மாணவர்கள் 40%, மற்றவர்கள் 50% பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் ஆண்டின் ஆகஸ்ட் 31 அன்று 16 வயதினை பூர்த்தி செய்தவர்களாக இருப்பதும் அவசியம்.

விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்ப நடைமுறைகள் ஆன்லைனில் அமைந்திருக்கும் இணையதளத்தில் தங்களது தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்துகொண்ட பின்னர் ஆன்லைன் விண்ணப்ப நடைமுறைகளைத் தொடங்கலாம். அங்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளின்படி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதுடன், அவசியமான சான்றிதழ்கள், கையெழுத்து மாதிரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை தரவேற்றம் செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமே தேர்வு கட்டணத்தையும் செலுத்தலாம்.

தேர்வு நடைமுறைகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுப்பதான 180 வினாக்கள் தேர்வில் கேட்கப்பட்டிருக்கும். தேர்வு நேரம் 150 நிமிடங்கள். மொத்த மதிப்பெண்கள் 720. சரியான விடைக்கு 4 மதிப்பெண்கள் அளிக்கப்படும். தவறான விடைக்கு1 மதிப்பெண் கழிக்கப்படும். வினாத்தாள் ஆங்கிலம் அல்லது இந்தியில் அமைந்திருக்கும். இந்தியாவின் 87 முக்கிய நகரங்களில் நுழைவுத் தேர்வு முகாம்கள் அமைந்திருக்கும்.

2 வகையாக தேர்வு நடைபெறும். இயற்பியல்வேதியியலுடன் உயிரியல் அல்லது வேளாண்மை பாடங்களைப் பயின்ற மாணவர்களுக்குத் தனியாகவும், இயற்பியல் வேதியியலுடன் கணிதத்தைப் பாடமாக பயின்ற மாணவர்களுக்குத் தனியாகவும் தேர்வு நடைபெறும்.

முக்கிய தினங்கள்

விண்ணப்ப நடைமுறைகள் மார்ச் 1 அன்று தொடங்கும். விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 31. தேர்வு நாள் ஜூன் 1. தேர்வு முடிவுகளை ஜூன் 15 அன்று ஆன்லைன் மூலமாகவே அறிந்துகொள்ளலாம். கலந்தாய்வு நடைமுறைகள் ஜூலை முதல் வாரத்தில் தொடங்கி நடைபெறும்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்