தொடர்கள்

கொஞ்சம் technique கொஞ்சம் English 233: Verb Phrase - சேர்ந்து தான் இருக்குமா?

ஷர்மிளா தேசிங்

இனியன்: நேற்று Noun Phrase ஐப் பற்றி பார்த்தோம்.

இசை: Noun ஐ விவரித்து சொல்வதற்கு Noun Phrase பயன்படுகிறது.

பாட்டி: இன்று Verb Phrase ஐப் பற்றி பார்க்கப் போகிறோம்.

மித்ரன்: அப்படியென்றால் இது verb ஐ விவரித்து சொல்லுமா என்ன?

பாட்டி: இப்போது உங்க கிட்ட நான் சில கேள்விகளை கேட்குறேன். அதற்கு பிறகு இதைப் பற்றி நாம பேசலாம்.

இனியன்: சரி பாட்டி.

பாட்டி: ஒரு வாக்கியத்தில் verb ன் பயன் என்ன?

இசை: ஒவ்வொரு tense ற்கும் ஒரே verb ஐ ஒவ்வொரு விதமாக பயன்படுத்துவோம் பாட்டி.

உமையாள்: Simple, past, future, continuous, perfect, perfect continuous, இப்படி ஒவ்வொரு tense ற்கும் ஒவ்வொரு விதத்தில் verb ஐ எழுதுவோம்.

மித்ரன்: Come, is coming, have come, will come, have been coming அப்படின்னு சொல்லிட்டே போகலாம்.

பாட்டி: இது அனைத்துமே Verb phase தான்.

இனியன்: அப்படின்னா, verb உடன் சேர்ந்து வருகிற வார்த்தைகளை verb phrase என்று சொல்லலாமா?

பாட்டி: சொல்லலாமே!

இசை: இந்த வார்த்தைகள் மட்டுமில்லாமல், நிறைய வார்த்தைகள் verb உடன் இணைந்து வருமே!

பாட்டி: Verb phrase இல் நிறைய type இருக்குது. இந்த table ஐ பாருங்க.

(தொடரும்)

கட்டுரையாளர்: மொழித்திறன் பயிற்றுநர்

SCROLL FOR NEXT