பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெல்லை தமிழ்நாடு அறிவியல் மையம் சார்பில் விருதுநகர் ஹாஜி பி.செய்யது முகமது மேல்நிலைப் பள்ளியில் நடமாடும் இலவச அறிவியல் கண்காட்சி நடத்தப்படுகிறது.
விருதுநகர் மாவட்டபள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 3 நாள் அறிவியல் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது. அன்றாட வாழ்வில் இயந்திரங்கள் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில், நெம்புகோல், சக்கரமும்அச்சுத் தண்டும், சாய்தளம், கப்பி,சூரிய மின் சக்தி உள்ளிட்டவை தொடர்பான மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.