கோடை விடுமுறை தொடங்கியதால் களைகட்டிய குமரி சுற்றுலா மையங்கள்

By எல்.மோகன்

நாகர்கோவில்: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் வட இந்திய, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிறு மற்றும் பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். சபரிமலை சீஸன் மற்றும் கோடை விடுமுறையான ஏப்ரல், மே மாதங்களில் பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும். ஆண்டுக்கு 85 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு மேல் கன்னியாகுமரிக்கு வருகை புரிகின்றனர். கோடை விடுமுறையான தற்போது தேர்தல் முடிந்த பின்பு சுற்றுலா பயணிகள் அதிகளவில் கன்னியாகுமரி வருகின்றனர்.

ஞாயிற்றுக் கிழமையான நேற்று கன்னியாகுமரியில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கூடினர். கேரளா மற்றும் வட மாநில சுற்றுலா பயணிகளும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகளும் வந்திருந்தனர். நேற்று அதிகாலை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஆர்வம் காட்டினர். சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்ததால், செல்பி எடுத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அதேபோல கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை யிலேயே படகுத் துறையில் ஏராளமானோர் காத்திருந்தனர். பகவதி அம்மன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள பாரத மாதா கோயில், ராமாயண தரிசன கண்காட்சி கூடம், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், அரசு பழத்தோட்டம், சுற்றுச் சூழல் பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதமாக சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவியில் கொட்டும் குறைந்த அளவு தண்ணீரில் குளிக்க சுற்றுலா பயணிகள் மத்தியில் போட்டி நிலவியது. மாத்தூர் தொட்டிப்பாலம், உதயகிரிகோட்டை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள பிற சுற்றுலா மையங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. கன்னியாகுமரியில் கோடை சீசன் களை கட்டியிருப்பதால் சிறு மற்றும் பெரு வியாபாரிகள், தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழை கூண்டு இணைப்பு பால பணி நடைபெறுவதால் விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டும் படகு சேவை நடைபெறுகிறது. வட்டக்கோட்டைக்கு இயக்கப்படும் இரு சொகுசு படகுகளும் எப்போதாவது மட்டும் இயக்கப்படுகிறது. தற்போது கோடை சீஸனில் கூட்டம் அதிகமாக இருப்பதால், வட்டக்கோட்டைக்கு இரு சொகுசு படகுகளையும் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படகில் பயணித்தவர் மரணம்: கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த சிலர் குழுவாக கன்னியாகுமரிக்கு நேற்று சுற்றுலா வந்திருந்தனர். அவர்களுடன் அசோகன் ( 55 ) என்பவரும் தனது குடும்பத்துடன் வந்திருந்தார். இவர்கள் அனைவரும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுவதற்காக படகில் சென்றனர். படகு பாதி தூரம் சென்ற போது, அசோகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

படகில் வைத்தே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் பயனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த படகு விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லாமல், மீண்டும் படகு தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. மெரைன் போலீஸார் விரைந்து வந்து, அசோகன் உடலை பெற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

உலகம்

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்