TNadu

சென்னையில்பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ எட்டியது :

செய்திப்பிரிவு

சென்னையில் பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ எட்டியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை மிக அதிகபட்சமாக ரூ.102 வரை அதிகரித்து விற்பனையானது. இதற்கிடையே, தமிழக அரசு பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 குறைத்ததால், ரூ.100-க்கு கீழ் குறைந்தது.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது. சென்னையில் நேற்றுமுன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.80-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.02-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், சென்னையில் நேற்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று ஒரு லிட்டர்பெட்ரோல் விலை 21 காசுகள் உயர்ந்து ரூ.100.01-க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை29 காசுகள் அதிகரித்து ரூ.95.31-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100 எட்டியிருப்பதால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT