TNadu

எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள் மறைவு

செய்திப்பிரிவு

வெண்மணி நிகழ்வை நாவலாக எழுதிய எழுத்தாளர் சோலை சுந்தரபெருமாள்(70) நேற்று முன்தினம் இரவு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

திருவாரூர் அருகே உள்ள காவனூரைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். வெண்மணி சம்பவம் தொடர்பாக இவர் எழுதிய செந்நெல் நாவல் இலக்கியத் துறையில் மிகவும் பாராட்டுப் பெற்றது. மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இந்த நாவல் மொழிபெயர்க் கப்பட்டது.

இவருடைய பல்வேறு படைப்புகள் பாரதிதாசன் பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களிலும், பள்ளி பாடப் புத்தகங்களிலும் பாடமாக இடம்பெற்றுள்ளன.

இவருக்கு மனைவி பத்மாவதி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இறுதிச் சடங்கு நேற்று காவனூரில் நடந்தது.

SCROLL FOR NEXT