மாணவிகள் புகார் தெரிவித்ததால் மானாமதுரை தனியார் செவிலியர் கல்லூரியை ஆய்வுசெய்த நீதிபதிகள்

By செய்திப்பிரிவு

மானாமதுரையில் மாணவிகள் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து தனியார் செவிலியர் பயிற்சிக் கல்லுாரியில் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வான்புரத்தில் உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரு கின்றனர். இக்கல்லூரியில் போதிய எண்ணிக்கையிலான விரிவுரை யாளர்கள் நியமிக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்யப்பட வில்லை. விடுதியில் மின்சார வசதி இல்லாததால் இருட்டில் தங்கும்நிலை உள்ளது என்று ஆளுநர், உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோ ருக்கு மாணவிகள் புகார் கடிதம் அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து நீதிபதிகள் பாலமு ருகன், சுனில்ராஜா, மானாமதுரை வட்டாட்சியர் மாணிக்கவாசகம் ஆகியோர் செவிலியர் கல்லூரியில் வகுப்பறைகள், கழிப்பறைகள், தங் கும் விடுதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் மாணவிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

இதுகுறித்து கல்லுாரி நிர்வா கத்தினர் கூறுகையில், கரோனா ஊரடங்குத் தளர்வு அறிவிக்கப்பட்ட பிறகு கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. அதனால் வழக்கமான நடைமுறையின் காரணமாக அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். வேறு பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்