திருவண்ணாமலையில் உள்ள - அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அங்கீகாரம் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அங்கீகாரம் வழங் கியதுடன் 150 மருத்துவ மாணவ, மாணவிகள் படிக்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஜீவா கல்வி அறக்கட்டளை மூலமாக தொடங்கப்பட்டுள்ள அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் அளித்து இந்தாண்டு முதல் 150 மாணவ, மாணவிகள் படிக்கஅனுமதி வழங்கியுள்ளது. அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 500 படுக்கை வசதிகள் கொண்டது. 11 அறுவை சிகிச்சை மையங்கள், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன், நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சைக்கூடம், மகப்பேறு மருத்துவ சிகிச்சைக்கூடம், குழந்தைகள் பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு என பல்வேறு பிரிவுகளுடன் செயல்பட்டு வருகிறது.

இங்கு வசதி படைத்தவர்கள் மட்டும் இல்லாமல் நடுத்தர, ஏழை மக்களும் மிக எளிமையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அருணை மருத்துவமனையில் இருந்து 2 ஆயிரம் கரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தகுதியும் அனுபவமும் மிக்க மருத்துவப் பணியாளர்கள், மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்கள் என சென்னை, கோவை போன்ற நகரங்களுக்கு இணையான வசதிகளுடன் கூடியதாக அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை உள்ளது.

இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையால் திருவண்ணா மலை மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துணைத் தலைவர்கள் எ.வ.குமரன், எ.வ.வே.கம்பன், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், மருத்துவமனை கண்காணிப்பாளர் குப்புராஜ் ஆகி யோர் தெரிவித்துள்ளனர். 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

45 mins ago

இந்தியா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்