கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுதொடர்பாக முன்னாள் படைவீரர் நலத்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்களின் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூ. ஒரு லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்குவதற்கு சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, தமிழ்நாடு பொது நிர்வாகம் மற்றும் அதிகாரப்பூர்வ அறக்கட்டளையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்வி உதவித் தொகை பெறத் தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தகுதியுடைய முன்னாள் படைவீரர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், குடும்பத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மாணவர்களுக்கும், மாணவர்கள் கட்டாயமாக 2019-20-ம் கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்று 80 சதவீத மதிப்பெண்ணும், தொழில்முறை படிப்புகளான பி.இ., பி.எல்.,எம்பிபிஎஸ், பிடிஎஸ்., பி.வி.எஸ்சி., பி.எஸ்சி (அக்ரி) போன்ற படிப்புகளில் 2020-21-ம் கல்வியாண்டு முதலாமாண்டில் 50 சதவீதம் மதிப்பெண்ணும் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
இத்தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுதொடர்பான விவரங்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04343-236134 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago