காவல் நிலையத்துக்கு 2 சோதனை சாவடிகள் வீதம் - தினசரி சுழற்சி முறையில் வாகன தணிக்கை : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தகவல்

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் சங்கிலி பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் அடுத்தடுத்த இரண்டு இடங்களில் சங்கிலி பறிப்பு சம்பவம் நடைபெற்றது குறித்து காவல் துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர். மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால் வாகனத் தணிக்கையை தினசரி மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்குள் 2 முக்கிய வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட உள்ளனர். அப்போது, சந்தேக நபர்களை விசாரிக்கவும் வாகனங்களின் ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர். குற்ற செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இரவு நேரத்தில் மட்டும் வாகனத் தணிக்கை மேற் கொள்ளாமல் பகல் நேரத்திலும் நடத்த உள்ளனர்.

இதன்மூலம் வாகன திருடர்கள், சங்கிலி பறிப்பு திருடர்கள், சாராயம் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்துபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல் துறையினர் தெரிவிக் கின்றனர். ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் ஒரு உதவி ஆய்வாளர் அல்லது சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் காவலர்கள் அடங்கிய குழுவினர் வாக்கி டாக்கியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனத் தணிக்கையின்போது யாராவது காவல் துறையினரை ஏமாற்றிச் சென்றால் அதுகுறித்த விவரங் களை வாக்கி டாக்கி மூலம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த தினசரி காலை 8 முதல் 11.30 மணி வரையும், பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையும் அதன் பிறகு மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் சுழற்சி முறையில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுவாக திருடப்படும் வாகனங்கள் சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒவ்வொரு நகருக்கும் வந்து செல்லும் முக்கிய சாலைகளில் வாகனத் தணிக்கையை தினசரி மேற்கொண்டால் குற்றச் செயல் கள் தடுக்க முடியும்’’ என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்