பழங்குடியினர் உற்பத்தி பொருள் விற்பனை மையங்கள் ஆட்சியர் சந்திப் நந்தூரி ஆய்வு

தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள கோவிலூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைமை அலுவலகத்தை ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். அங்கு, சந்தைப்படுத்த வைக்கப்பட்டுள்ள மலைவாழ் மக்களின் தயாரிப்புகளான சாமை, கருமிளகு, தேன் மற்றும் புளி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

மேலும் அவர், அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள ஜவ்வாதுமலை பழங்குடியின உழவர் உற்பத்தி யாளர் நிறுவனத்தின் மூலம் செயல்பட்டு வரும் சாமை அரவை உற்பத்தி, தேன் பதப்படுத் துதல், புளி பிரித்தெடுத்தல் மையத்தை ஆய்வு செய்தார். இதையடுத்து, ஒருங்கிணைந்த வளாகம் கட்டுமானப் பணியை பார்வையிட்ட ஆட்சியர், பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார்.

பின்னர் அவர், ஜமுனாமரத் தூரில் உள்ள படகு சவாரி, சிறுவர் பூங்கா, பீமன் நீர்வீழ்ச்சி ஆகியவற்றை பார்வையிட்டார். அதன்பிறகு, கீழுர் கிராமத்தில் பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டப்படும் வீட்டை பார்வையிட்டார். முன்னதாக, ஜவ்வாதுமலை பழங்குடியினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன அலுவலக வளாகத்தில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பில் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் விற்பனை வாகனத்தை கொடி யசைத்து ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE