கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயிகள் - பயிர் காப்பீடு திட்டத்தில் 15-ம் தேதி வரை சேரலாம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராபி 2021-22 பருவத்திற்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய அனைத்து விவசாயிகளும் வரும் 15-ம் தேதிக்குள் சேர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராபி 2021-22 பருவத்திற்கு திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர்காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர்காப்பீடு செய்ய விரும்பி, நாடி வரும் அனைத்து விவசாயிகளும் (கடன் பெற்றவர்கள் மற்றும் கடன் பெறாதோர்) பயிர் காப்பீடு செய்ய வரும் 15-ம் தேதி கடைசி நாளாகும். இத்திட்டத்தில் சேர்ந்து பயன் பெற, ஏதுவாக மாவட்டத்தில் செயல்படும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொதுச் சேவை மையங்கள் வங்கி விடுமுறை நாட்களான இன்று (13-ம் தேதி) மற்றும் நாளை(14-ம் தேதி) ஆகிய இரு நாட்களும் திறந்திருந்து செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விரு நாட்களும் விவசாயிகள் அருகாமையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயிர் காப்பீட்டு பிரீமியத் தொகையினை செலுத்தலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 mins ago

சினிமா

19 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

22 mins ago

சினிமா

28 mins ago

வணிகம்

10 mins ago

இந்தியா

22 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

சினிமா

23 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்