Regional03

மின்சாரம் தாக்கி இளைஞர் மரணம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி சந்திப்பு கைலாசபுரத்தை சேர்ந்தவர் மலைப்பாண்டி. 6-வது வட்ட திமுக செயலாளர். இவரது மகன் கொம்பையா (27). கூலித்தொழிலாளி. தனது வீட்டு மாடியில் துணிகளை காயப்போடுவதற்காக சென்றபோது அவ்வழியாகச் சென்ற மின்கம்பி மீது கொம்பையாவின் கை உரசியுள்ளது.

இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT