Regional03

ஓசூரில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை பள்ளங்களை சீரமைக்க மக்கள் கோரிக்கை :

செய்திப்பிரிவு

ஓசூர் குடியிருப்பு பகுதி சாலைகளில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை மூடி தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 39-வது வார்டில் உள்ள ஆர்.கே.நகர்2-வது குறுக்குதெரு மற்றும் இதர குடியிருப்பு பகுதிகளில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்க வீடுகளின் முன்புள்ள சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது. இப்பள்ளங்களில் மழை நீர் தேங்கிநிற்கிறது. இதனால் இப்பகுதிகளில் இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் முறையாக மூடப்படாமல், தொடர் மழையால் சேரும் சகதியுமாக உள்ள இச்சாலைகளின் வழியாக நடந்து செல்ல முடியாமல் பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால், ஓசூர் 39-வது வார்டில் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளங்களை முறையாக மூடவும், தார் சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT