Regional03

நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் எங்கு செயல்படுத்தப்படும்? : மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் பட்டியல் வெளியீடு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நகர்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல் படுத்தப்படும் மாநகராட்சி பகுதிகள், நகராட்சிகள், பேரூரா்ட சிகள் பட்டியல் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் மத்திய அரசின் உதவியுடன் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக உள்ளாட்சிகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நகர்ப்புறத்தில் வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் அரசுக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான வழி காட்டுதல்களுடன் அரசாணையும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இத்திட்டத்தை பரிட்சார்த்த அடிப்படையில் செயல்படுத்த மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில் கூறியிருப் பதாவது: நகர்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் நெறிமுறைகள்படி, சென்னையில் 2 மண்டலங்கள், மீதமுள்ள 14 மாநகராட்சிகளில் தலா ஒரு மண்டலம், 7 நகராட்சிகள், 37 மாவட்டத்துக்கு தலா ஒரு பேரூராட்சி என 37 பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, சென்னை யில் மண்டலம் 4- தண்டையார்ப் பேட்டை, மண்டலம் 6- திருவிகநகர் ஆகிய பகுதிகளிலும், மதுரை- மண்டலம் 1, கோவை- கிழக்கு மண்டலம், திருச்சிராப்பள்ளி- கே.அபிஷேக புரம், வேலூர்- மண்டலம் 1, ஓசூர்- 8 வது சரகம், ஆவடி- 3,6 சரகங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.

பேரூராட்சிகளை பொறுத்த வரை, காஞ்சிபுரம்- உத்திரமேரூர், செங்கல்பட்டு- எடைக்காழிநாடு, திருவள்ளூர்- பொதட்டூர்பேட்டை, வேலூர்-பள்ளிகொண்டா, திருப்பத்தூர்- ஆலங்காயம், ராணிப்பேட்டை- நெமிலி, திருவண்ணாமலை- போளூர் ஆகிய பேரூராட்சிகளில் செயல் படுத்தப்பட உள்ளது.

SCROLL FOR NEXT