உதகையில் திரண்ட சுற்றுலா பயணிகள் :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறைந்து கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதிமுதல் சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் வார இறுதி நாள் மற்றும் விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர். உதகை அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, கர்நாடக அரசு பூங்கா, உதகை படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்த்தனர். பலர் வெள்ளிக்கிழமை இரவு உதகையில் திரண்டதால், சாலையோர வியாபாரிகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் உதகையிலுள்ள உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின.

நேற்று மட்டும் உதகை தாவரவியல் பூங்காவுக்கு 5,883 பேரும், ரோஜா பூங்காவுக்கு 2,575 பேரும், தொட்டபெட்டா தேயிலைப் பூங்காவுக்கு 373 பேரும், மரவியல் பூங்காவுக்கு 56 பேரும், சிம்ஸ் பூங்காவுக்கு 1,865 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 469 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 253 பேரும் வந்திருந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்