Regional03

சாலையில் திரிந்த மாடுகள் : வஉசி பூங்காவில் அடைப்பு :

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகரில் பிரதான சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் கால்நடைகளைப் பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வ.உ.சி. உயிரியல் பூங்கா இயக்குநர் செந்தில்நாதன் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் உக்கடம், புல்லுக்காடு, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 2 கன்றுக் குட்டிகள் உள்பட 7 மாடுகளை பிடித்து வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அடைத்தனர்.

இதுகுறித்து, செந்தில்நாதன் கூறும்போது, “மாடுகளின் வயதைப் பொறுத்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதற்குப் பிறகும் சாலைகளில் கால்நடைகள் உலா வந்தால், அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT