Regional03

அஞ்சல் துறையில் தமிழில் படிவங்களை வழங்க கோரி பொதுமேலாளருக்கு எம்.பி கடிதம் :

செய்திப்பிரிவு

அஞ்சல் துறையில் பண விடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லாததது கண்டிக்கத்தக்கது. இதனை மாற்றி தமிழில் படிவங்கள் வழங்க வேண்டும் என அஞ்சல் பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்பி நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தி பேசாத மாநிலங்களில், அம்மாநில மொழிகளில் சேவை வழங்குவது மத்திய அரசு நிறுவனங்களின் கடமை.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, சாதாரண குடிமகன் வழக்கு விவரங்களை தெரிந்துகொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதே நீதி வழங்கல் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்றார்.

எனவே அஞ்சல்துறையில் வாடிக்கையாளர் சேவை தொடர்பான பணவிடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்கள் தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில்நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT