Regional03

பழநியை போல் திருப்பரங்குன்றம் மலைக்கு ‘ரோப் கார்’ : இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?

செய்திப்பிரிவு

பழநி மலையைப் போல் திருப் பரங்குன்றம் மலைக்கு சுற்றுலாப் பயணிகளைக் கவர ‘ரோப் கார்’ அமைக்க இந்து சமய அற நிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முருகனின் அறுபடை வீடு களில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். இங்குள்ள சுப்ரமணியசுவாமி கோயில் குடைவரைக் கோயி லாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. இம்மலையின் உச்சியில் காசி விஸ்வநாதர் கோயிலும் அமைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் வரு கையை அதிகரிக்க திருப்பரங் குன்றம் மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பழநியை போன்று ரோப்கார் அமைக்கும் திட்டம் ஆலோசிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், அதன்பிறகு ஆலோசிக்கப் பட்ட திருச்சி மலைக்கோயிலில் ரோப்கார் திட்டம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்கு ரோப் கார் அமைக் கப்பட்டால் அதில் பயணம் செய்து மலை உச்சிக்கு சென்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள், பசுமலை, நாகமலை, யானைமலை மற்றும் மதுரை மாநகரின் முழு தோற்றத்தையும், மதுரை விமான நிலையத்தையும் கண்டு ரசிக்க முடியும். அங்குள்ள காசி விஸ்வநாதர் கோயிலிலும் தரிசனம் செய்யலாம்.

தற்போது படிக்கட்டுகள் வழியாகவே பக்தர்கள், மலை உச்சிக்குச் செல்கின்றனர். செங்குத்தான மலையாக இருப்பதால் வயதானவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் எளிதில் செல்ல முடியவில்லை. எனவே பழநியை போல் திருப் பரங்குன்றம் மலைக்குச் செல்ல ரோப் கார் அமைக்க இந்து அறநிலையத்துறை நட வடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலாப் பய ணிகள் கூறியதாவது: திருப் பரங்குன்றம் மலை உச்சிக்கு செல்ல 600-க்கும் மேற்பட்ட படிக்கட்டுகளில் ஏற வேண்டும். இதனால் இளைஞர்கள், திடகாத் திரமானவர்கள் மட்டுமே மலை உச்சிக்குச் செல்ல முடிகிறது. பெண்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் மலை உச்சிக்குச் செல்ல முடியாது.

இங்கு ரோப் கார் அமைத்தால் பழநியைப் போல் திருப்பரங்குன்றம் மலையும் சுற்றுலா ரீதியாக வளர்ச்சியடையும். சுற்றுலாப் பயணிகள் வருகையும் பலமடங்கு அதிகரிக்கும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT