நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி ரவிவர்மன் புதுத்தெருவில் அமைந்துள்ள வள்ளலார் பேரவையில் வள்ளலாரின் 199-வது அவதார தினவிழா நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை வகித்தார். நாகர்கோவில் டிஎஸ்பி நவீன்குமார், தினேஷ் ஆகியோர் வள்ளலார் திருஉருவ படத்தை திறந்துவைத்து, அருள்ஜோதியை ஏற்றி வைத்தனர். தக்கலை டிஎஸ்பி கணேசன் தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவிகள் வழங்கினார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.