கோவை: கோவையில் விதிகளை மீறி கட்டிய இரு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கோவை ரத்தினபுரி விநாயகர் கோயில் வீதியில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டதில் விதிமீறல் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் ஏ.பாபு, உதவி செயற்பொறியாளர் னிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் இரு கட்டிடங்களிலும் ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, “இரு கட்டிடங்களிலும் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி இல்லாமல் 3 மற்றும் 4-ம் தளங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 குடியிருப்புகளுக்கு பதிலாக 16 குடியிருப்புகள் ஒவ்வொரு கட்டிடத்திலும் உருவாக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கட்டிடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்டிடத்தின் மதிப்பும் தலா ரூ.1.5 கோடி வரை இருக்கும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago